சுப்மன் கில்லுக்கு காயம்..இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சி
|பயிற்சி ஆட்டத்தின் போது சுப்மன் கில்லுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது
பெர்த் ,
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த தொடரில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா விளையாட உள்ளது.இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் ,பயிற்சி ஆட்டத்தின் போது சுப்மன் கில்லுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது
முன்னதாக பயிற்சி ஆட்டத்தில் கே.எல்.ராகுலுக்கு திடீரென முழங்கையில் காயம் ஏற்பட்டது . இதனால் களத்தில் இருந்து அவர் உடனடியாக வெளியேறினார். இரு முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.