சூப்பர் ஸ்டார்கள் நிறைந்த இந்திய அணி...ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியோன்
|2-வது டெஸ்ட் அடிலெய்டில் வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது.
அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், இந்த போட்டி தொடர்பாக ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியோன் கூறியதாவது,
நான் இந்திய அணியை சூப்பர் ஸ்டார்கள் நிறைந்து குழுவாகப் பார்க்கிறேன். கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு, வெற்றிக்கு முழு அணியும் சிறப்பாக செயல்பட வேண்டும். "இந்திய அணியில் நாங்கள் எந்த ஒரு வீரரின் மீது மட்டும் செலுத்த மாட்டோம். நாங்கள் இந்த போட்டியில் எங்களது சிறந்த விளையாட்டை விளையாடுவோம் . கடுமையாக போட்டியிடுவோம். ஒரு தரமான அணிக்கு எதிராக நாங்கள் கடுமையாக போட்டியிடுவோம். என தெரிவித்துள்ளார்.