< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஆஸ்திரேலிய பிரதமரை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்
|28 Nov 2024 3:07 PM IST
ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று சந்தித்தனர்.
அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டில் பகல் - இரவு ஆட்டமாக தொடங்க உள்ளது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று சந்தித்தனர். ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின்போது இந்திய அணி வீரர்களிடம் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் சிறிது நேரம் உரையாடினார்.