< Back
கிரிக்கெட்
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் அஸ்வின் - விராட் கோலி
கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் அஸ்வின் - விராட் கோலி

தினத்தந்தி
|
18 Dec 2024 2:46 PM IST

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

பிரிஸ்பேன்,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வந்தது.மழையால் பாதிப்புக்கு உள்ளான இந்த ஆட்டம் இன்று டிராவில் முடிந்தது. இந்த போட்டி டிராவில் முடிந்த உடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை பி.சி.சி.ஐ தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் இதுவரை 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டு மொத்தமாக 765 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அஸ்வின் ஓய்வு தொடர்பாக விராட் கோலி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

நான் உங்களுடன் 14 வருடங்கள் விளையாடி இருக்கிறேன், இன்று நீங்கள் ஓய்வு பெறுகிறீர்கள் என்று சொன்னபோது, அது என்னை கொஞ்சம் உணர்ச்சிவசப்படுத்தியது . நாம் ஒன்றாக விளையாடிய நினைவுகள் எனக்கு வந்தது. உங்களுடன் பயணத்தின் ஒவ்வொரு பகுதியையும் நான் ரசித்தேன், இந்திய கிரிக்கெட்டில் உங்களின் திறமை மற்றும் மேட்ச் வின்னிங் பங்களிப்புகள் எதற்கும் இரண்டாவதாக இல்லை, நீங்கள் எப்போதும் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக நினைவுகூரப்படுவீர்கள். உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க விரும்புகிறேன்.எல்லாவற்றிற்கும் நன்றி நண்பரே. என தெரிவித்துள்ளார் .

மேலும் செய்திகள்