< Back
கிரிக்கெட்
எதிர்வரும் 3 ஐ.சி.சி. தொடர்களிலும் இந்தியாவே கோப்பையை வெல்லும் - ஜெய்ஷா உறுதி
கிரிக்கெட்

எதிர்வரும் 3 ஐ.சி.சி. தொடர்களிலும் இந்தியாவே கோப்பையை வெல்லும் - ஜெய்ஷா உறுதி

தினத்தந்தி
|
23 Aug 2024 4:10 PM IST

இந்தியா அடுத்ததாக நடைபெறும் 3 ஐ.சி.சி. தொடர்களை வெல்லும் என்று ஜெய்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மும்பை,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து ஆண்கள் 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

இந்த மூன்றிலும் இந்திய ஆண்கள் மற்றும் மகளிரணி வெற்றிகளைப் பெற்று ஹாட்ரிக் கோப்பைகளை வெல்லும் என்று ஜெய்ஷா உறுதியாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-"பார்படாஸ் மண்ணில் ரோகித் சர்மா இந்திய மூவர்ணக் கொடியை நிலை நாட்டுவார் என்று டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக நான் சொன்னதை இங்கே அனைவருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன். அதை ரோகித் சர்மா செய்து காட்டினார். உங்களுக்கு 140 கோடி மக்களின் ஆசீர்வாதம் இருக்கிறது. எனவே அதே போன்ற வெற்றியை நாம் சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் மகளிர் டி20 உலகக்கோப்பையில் பெறுவோம் என்று நான் சொல்வேன்" எனக் கூறினார்.

மேலும் செய்திகள்