இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டி அட்டவணையில் மாற்றம்
|இந்திய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி பல்லகெலேயில் வருகிற 26-ம் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்த போட்டி ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு வருகிற 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதேபோல் 2-வது, 3-வது 20 ஓவர் போட்டியும் ஒருநாள் தள்ளிபோடப்பட்டு முறையே 28, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஒருநாள் தொடரில் முதலாவது ஆட்டம் ஆகஸ்டு 1-ம் தேதியில் இருந்து 2-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 2-வது, 3-வது ஒருநாள் போட்டி ஏற்கனவே அறிவித்தபடி முறையே ஆகஸ்டு 4, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டிகள் கொழும்பில் அரங்கேறுகிறது.