< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்: வெற்றி கோப்பை அறிமுகம்
|7 Nov 2024 10:53 PM IST
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் நாளை ஆரம்பமாக உள்ளது.
டர்பன்,
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை டர்பன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடரை கைப்பற்றும் அணிக்கு வழங்கப்படும் கோப்பை அறிமுக விழா இன்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரமும், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவும் ஒன்றாக கோப்பையுடன் புகைப்படம் எடுத்தனர்.