< Back
கிரிக்கெட்
இந்தியா - வங்காளதேசம் 2-வது டெஸ்ட்: போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
கிரிக்கெட்

இந்தியா - வங்காளதேசம் 2-வது டெஸ்ட்: போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

தினத்தந்தி
|
27 Sept 2024 2:23 PM IST

இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

கான்பூர்,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 35 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் அடித்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்