< Back
கிரிக்கெட்
இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்; முதல் நாள் ஆட்டம் ரத்து

Image Courtesy: AFP

கிரிக்கெட்

இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்; முதல் நாள் ஆட்டம் ரத்து

தினத்தந்தி
|
16 Oct 2024 3:26 PM IST

இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

பெங்களூரு,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.

இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்குவதாக இருந்தது. இந்த நிலையில், பெங்களுருவில் போட்டி நடைபெறும் பகுதியில் மழை பெய்து வருவதால் இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

மழை நின்ற பிறகு ஆட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மழை நிற்காததால் தற்போது இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை 2வது ஆட்டம் நடைபெறுகிறது.


மேலும் செய்திகள்