< Back
கிரிக்கெட்
இந்தியா - நியூசிலாந்து 2வது டெஸ்ட்; புனேவில் இன்று தொடக்கம்

Image courtesy: AFP

கிரிக்கெட்

இந்தியா - நியூசிலாந்து 2வது டெஸ்ட்; புனேவில் இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
24 Oct 2024 5:52 AM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

புனே,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். கழுத்து பிடிப்பால் கடந்த டெஸ்டில் ஆடாத இந்திய வீரர் சுப்மன் கில்லும் பயிற்சி செய்தார். கில் அணிக்கு திரும்பும் போது சர்பராஸ்கான் அல்லது லோகேஷ் ராகுல் ஆகியோரில் ஒருவர் வெளியே உட்கார வேண்டி இருக்கும்.

மற்றபடி அணியில் பெரிய மாற்றம் இருக்காது எனலாம். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற நியூசிலாந்து கடுமையாக முயற்சிக்கும். அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க இந்தியா, வெற்றி பெற கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

மேலும் செய்திகள்