< Back
கிரிக்கெட்
மாற்றுத்திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்பு

கோப்புப்படம்

கிரிக்கெட்

மாற்றுத்திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்பு

தினத்தந்தி
|
27 Dec 2024 12:11 PM IST

மாற்றுத்திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது.

புதுடெல்லி,

மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இலங்கையின் கொழும்புவில் நடைபெறவுள்ளது. இந்த தொடரானது ஜனவரி 12-ம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கவுள்ளதாக மாற்றுத் திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தவிர்த்து, இந்த தொடரில் இங்கிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன. இது தொடர்பாக டிசிசிஐ செயலர் ரவி சவுகான் கூறியதாவது, 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி கலந்துகொள்ளவுள்ளது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமையான தருணம்.

கொழும்புவில் நடைபெறவுள்ள இந்த கிரிக்கெட் தொடர் நமது வீரர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி தருவதோடு, அனைவரையும் உள்ளடக்கிய விளையாட்டு என்பதையும் உணர்த்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா போட்டி அட்டவணை விவரம்:

இந்தியா - பாகிஸ்தான் - ஜனவரி 12

இந்தியா - இங்கிலாந்து - ஜனவரி 13

இந்தியா - இலங்கை - ஜனவரி 15

இந்தியா - பாகிஸ்தான் - ஜனவரி 16

இந்தியா - இங்கிலாந்து - ஜனவரி 18

இந்தியா - இலங்கை - ஜனவரி 19

இறுதிப்போட்டி - ஜனவரி 21



மேலும் செய்திகள்