இந்திய அணி போட்டி அட்டவணை 2025 - முழு விவரம்
|2025-ம் ஆண்டில் இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகளின் முழு அட்டவணையை இப்பதிவில் பார்ப்போம்.
புதுடெல்லி,
மெல்போர்னில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததன் மூலம் இந்திய அணியின் இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் அட்டவணை நிறைவு பெற்றது. இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா அணியின் செயல்திறன் ஏற்ற இறங்கங்களை கொண்டுள்ளது. இதனையடுத்து எதிர்வரும் 2025-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்திய அணி ஜனவரி 3-ம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடுவதன் மூலம், அடுத்த ஆண்டு அட்டவணையை தொடங்குகிறது.
இதையடுத்து ஜனவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி, அடுத்ததாக பிப்ரவரி - மார்ச் மாதம் ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.அதன்பிறகு இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்து சென்று ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதுடன், வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்பின் அக்டோபரில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி, அதன்பின் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது.
அதன்பின் ஆஸ்திரேலியா சென்று ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி, ஆண்டின் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. இதன்மூலம் இந்திய அணி எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் 18 டி20 போட்டிகளிலும், 10 டெஸ்ட் போட்டிகளிலும் 12 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகளின் முழு அட்டவணையை இப்பதிவில் பார்ப்போம்.
இந்திய அணி போட்டி அட்டவணை
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
கடைசி டெஸ்ட் போட்டி - ஜனவரி 3-7 - சிட்னி
இந்தியா - இங்கிலாந்து டி20 தொடர்
முதல் டி20: ஜனவரி 22, 2025, கொல்கத்தா
2வது டி20: ஜனவரி 25, 2025, சென்னை
3வது டி20: ஜனவரி 28, 2025, ராஜ்கோட்
4வது டி20: ஜனவரி 31, 2025, புனே
5வது டி20 : பிப்ரவரி 2, 2025, மும்பை
இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் தொடர்
முதல் ஒருநாள் போட்டி: பிப்ரவரி 6, 2025, நாக்பூர்
2வது ஒருநாள் போட்டி: பிப்ரவரி 9, 2025, கட்டாக்
3வது ஒருநாள் போட்டி: பிப்ரவரி 12, 2025, அகமதாபாத்
சாம்பியன்ஸ் கோப்பை:-
இந்தியா - பங்களாதேஷ் - பிப்ரவரி 20, துபாய்
இந்தியா - பாகிஸ்தான் - பிப்ரவரி 23, துபாய்
இந்தியா - நியூசிலாந்து - மார்ச் 2, துபாய்
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி - மார்ச் 4, துபாய் (தகுதி பெற்றால்)
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி - மார்ச் 9, துபாய் (தகுதி பெற்றால்)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: ஜூன் 11-15, 2025 - லார்ட்ஸ் (தகுதி பெற்றால்)
இங்கிலாந்து - இந்தியா:-
முதல் டெஸ்ட்: ஜூன் 20-24 , ஹெடிங்லி, லீட்ஸ்
இரண்டாவது டெஸ்ட்: ஜூலை 2-6, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம்
மூன்றாவது டெஸ்ட்: ஜூலை 10-14, லார்ட்ஸ், லண்டன்
நான்காவது டெஸ்ட்: ஜூலை 23-27 , மான்செஸ்டர்
ஐந்தாவது டெஸ்ட்: 31 ஜூலை-ஆகஸ்ட் 4, ஓவல்
அட்டவணை உறுதிசெய்யப்படாத தொடர்கள்
ஆகஸ்ட் 2025 – வங்கதேசம் - இந்தியா 3 ஒருநாள், 3 டி20
அக்டோபர் 2025 – வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா - இரண்டு டெஸ்ட் போட்டிகள்
அக்டோபர் 2025 – ஆசிய கோப்பை டி20 தொடர்
அக்டோபர்-நவம்பர் 2025 - ஆஸ்திரேலியா - இந்தியா - 3 ஒருநாள், 5 டி20
நவம்பர் - டிசம்பர் 2025: இந்தியா - தென் ஆப்பிரிக்கா - (2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20)