< Back
கிரிக்கெட்
இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
கிரிக்கெட்

இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
18 July 2024 7:56 PM IST

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அணிக்கு திரும்பியுள்ளனர்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான டி20 போட்டி பல்லகெலேயில் வருகிற 27, 28, 30 ஆகிய தேதிகளிலும், ஒருநாள் போட்டி கொழும்புவில் ஆகஸ்டு 2, 4, 7 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 அணி விவரம் பின்வருமாறு:- சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்.

ஒருநாள் அணி விவரம் பின்வருமாறு:- ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

மேலும் செய்திகள்