< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா 4-வது டி20 போட்டி: மழையால் பாதிக்கப்பட வாய்ப்பா..?
|15 Nov 2024 4:56 PM IST
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 4-வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
ஜோகன்னஸ்பர்க்,
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்ரர்ஸ் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில் தொடரின் முடிவை நிர்ணயிக்கும் முக்கியமான இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டி நடைபெறும் சமயத்தில் அங்கு 30 - 40 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.