< Back
கிரிக்கெட்
இந்தியா - ஆஸ்திரேலியா முதலாவது டெஸ்ட்: சுப்மன் கில் விளையாடுகிறாரா..? வெளியான தகவல்

image courtesy: AFP

கிரிக்கெட்

இந்தியா - ஆஸ்திரேலியா முதலாவது டெஸ்ட்: சுப்மன் கில் விளையாடுகிறாரா..? வெளியான தகவல்

தினத்தந்தி
|
21 Nov 2024 8:28 AM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.

பெர்த்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி நாளை தொடங்க உள்ளது. இதனையொட்டி 10 நாட்களுக்கு முன்னதாகவே ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

பயிற்சியின்போது இந்திய அணியின் இளம் முன்னணி பேட்ஸ்மேனான சுப்மன் கில் இடது கை பெருவிரலில் காயமடைந்தார். இதனால் அவர் முதலாவது போட்டியில் இருந்து விலகி இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் அளித்த பேட்டியில், " சுப்மன் கில் காயத்திலிருந்து வேகமாக குணமடைந்து வருகிறார். அவர் முதல் போட்டியில் விளையாடுவாரா? இல்லையா? என்பது நாளைதான் முடிவு செய்யப்படும்" என்று தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்