இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி - இன்று தொடக்கம்
|இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையிலான 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்குகிறது.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய ஏ அணி, அந்நாட்டின் ஏ அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெக்கே நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையிலான 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி(4 நாள் ஆட்டம்) மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. இந்தியா ஏ அணியில் அபிமன்யு ஈஸ்வரனுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல் ஆட உள்ளனர். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வாகியிருக்கும் ராகுல், இந்த போட்டியை சரியான பயிற்சி களமாக பயன்படுத்தி கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்திய நேரப்படி ஆட்டம் காலை 5 மணிக்கு தொடங்குகிறது.