< Back
கிரிக்கெட்
கேமரா முன்... ரசிகரின் செயலால் எரிச்சல் அடைந்த ரோகித்; வைரலான வீடியோ
கிரிக்கெட்

கேமரா முன்... ரசிகரின் செயலால் எரிச்சல் அடைந்த ரோகித்; வைரலான வீடியோ

தினத்தந்தி
|
3 Dec 2024 6:00 AM IST

ரசிகரின் செயலால் எரிச்சல் அடைந்த ரோகித் ஒரு நேரத்தில் ஒரு வேலைதான் செய்ய முடியும் என்று கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.

கேன்பெர்ரா,

ஆஸ்திரேலியாவில் பிரதமர் லெவன் அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா வந்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவரின் செயலால் அவர் எரிச்சலடைந்து உள்ளார். அவர், மனுகா ஓவல் மைதானத்திற்கு வந்தபோது, ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர்.

சிலர் அவருடன் ஒன்றாக செல்பி புகைப்படங்களை எடுத்து கொண்டனர். ஒரு சிலர் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினர். ஒவ்வொருவரின் விருப்பத்திற்கும் ஏற்ப ரோகித் நடந்து கொண்டார். எனினும், ரசிகர் ஒருவருக்கு ஆட்டோகிராப் (கையெழுத்து) போட்டு கொடுத்தபோது, மற்றொரு ரசிகர் அவரை கேமராவில் படம் பிடிக்க முயன்றிருக்கிறார். இதற்காக கேமராவை பார்க்கும்படி ரோகித்திடம் கூறியிருக்கிறார்.

அதனால் சற்று எரிச்சலடைந்த ரோகித், ஆட்டோகிராப் போடும்போது படம் எடுக்க முடியாது. சற்று காத்திருக்கவும் என கூறியுள்ளார். ஒரு நேரத்தில் ஒரு வேலைதான் செய்ய முடியும் என்றும் அந்த ரசிகரிடம் கூறியிருக்கிறார். இதன்பின்னர் வரிசையாக பலருக்கு விரைவாக ஆட்டோகிராப் போட்டு கொடுத்து விட்டு, அந்த குறிப்பிட்ட ரசிகருடன் ஒன்றாக சிரித்தபடி செல்பியும் எடுத்து கொண்டார். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்