< Back
கிரிக்கெட்
இந்த வாரம் முழுவதும் நாங்கள் போராடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - பென் ஸ்டோக்ஸ்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

இந்த வாரம் முழுவதும் நாங்கள் போராடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - பென் ஸ்டோக்ஸ்

தினத்தந்தி
|
2 Dec 2024 2:30 AM IST

நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

கிறிஸ்ட்சர்ச்,

நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த வாரம் முழுவதும் நாங்கள் போராடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. 2-வது நாளில் 45 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த போது நெருக்கடிக்குள்ளானோம்.

ஆனாலும் விரும்பிய முன்னிலையை பெற்றது சிறப்பானது. ஹாரி புரூக்குக்கு (171 ரன்) கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தது. எப்போதும் எதிரணியினர் கேட்ச் வாய்ப்புகளை தவற விடும் போது வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை ஹாரி புரூக் சரியாக செய்தார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்