கிரிக்கெட்
தற்போது இந்திய பேட்டிங் வரிசையில் நான் இருந்தால் நிச்சயம் பதற்றமாகவே இருப்பேன் - டேவிட் வார்னர்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

தற்போது இந்திய பேட்டிங் வரிசையில் நான் இருந்தால் நிச்சயம் பதற்றமாகவே இருப்பேன் - டேவிட் வார்னர்

தினத்தந்தி
|
4 Nov 2024 3:44 PM IST

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது.

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.

தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்நிலையில், இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் தொடர் குறித்தும், பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடர் குறித்தும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டேவிட் வார்னர் சில கருத்துகளை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, நியூசிலாந்து - இந்தியா அணிக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை நான் திரும்பிப் பார்க்கிறேன். அதில் நியூசிலாந்து அணியினர் சில அற்புதமான கேட்ச்களை பிடித்திருந்தார்கள். அது அவர்களுக்கு சிறப்பானதாக அமைந்தது. இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெறுவது எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும். நியூசிலாந்து அணி மிகச் சிறப்பான ஒன்றை செய்து காட்டி இருக்கிறது. இது ஆஸ்திரேலியா அணிக்கும் உதவி செய்யக் கூடியதாக அமைந்திருக்கிறது.

இந்திய அணி சொந்த மண்ணில் மூன்று டெஸ்ட் போட்டியை முழுமையாக தோற்று ஆஸ்திரேலியா வருகிறது. ஆஸ்திரேலியா அணியில் மூன்று உலக தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழல் பந்துவீச்சாளர் இருக்கிறார். நான் தற்போது இந்திய பேட்டிங் வரிசையில் இருந்தால் நிச்சயம் பதற்றமாகவே இருப்பேன்.

மேலும் ஆஸ்திரேலியா டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க வேண்டும். தற்போது முழங்கால் காயத்தில் இருந்து வரும் முகமது ஷமி இந்திய அணியில் இல்லை. தற்போது இந்திய அணியில் வேகப்பந்து வீச்சில் பும்ரா மற்றும் சிராஜ் மட்டுமே இருக்கிறார்கள். இதை ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்