< Back
கிரிக்கெட்
ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியீடு

image courtesy: ICC

கிரிக்கெட்

ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியீடு

தினத்தந்தி
|
5 May 2024 6:39 PM IST

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.

துபாய்,

9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் 3-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது.

இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 2 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன. இந்த தொடரில் பங்கேற்க உள்ள அணிகள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவுகளில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் சுற்றில் மோதும். அதன் முடிவில் அந்த பிரிவுகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். இறுதிப்போட்டி அக்டோபர் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

குரூப் ஏ : ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தகுதி சுற்று அணி

குரூப் பி: தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், தகுதி சுற்று அணி

மேலும் செய்திகள்