டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறிய ஜெய்ஸ்வால்
|ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2வது இடம் பிடித்துள்ளார்.
துபாய்,
ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வாரம்தோறும் டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள், வீரர்கள், வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள், வீரர்கள், வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
அதில், சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2ம் இடம் பிடித்துள்ளார். 825 புள்ளிகள் பெற்ற ஜெய்ஸ்வால் 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 2வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 903 புள்ளிகளுடன் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 2வது இன்னிங்சில் சதம் விளாசிய இந்திய வீரர் விராட் கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 9 இடங்கள் முன்னேறி 13வது இடம் பிடித்துள்ளார்.