< Back
கிரிக்கெட்
ஐசிசி  டெஸ்ட் தரவரிசை:  ரிஷப் பண்ட்  முன்னேற்றம்
கிரிக்கெட்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ரிஷப் பண்ட் முன்னேற்றம்

தினத்தந்தி
|
6 Nov 2024 6:26 PM IST

இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ஒரு இடம் சரிந்து 4 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

துபாய்,

ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் சரிந்து 4 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய வீரர் ரிஷப் பண்ட் 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 0-3 என இழந்தது . இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடினார் இதனால் அவர் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் . விராட் கோலி 22-வது இடத்தையும், இந்திய கேப்டன் ரோகித் சர்மா 26-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திலும் , நியூசிலாந்து அணியின் வில்லியம்சன் 2-வது இடத்திலும், ஹாரி புரூக் (இங்கிலாந்து) 3-வது இடத்திலும் உள்ளனர்.

மேலும் செய்திகள்