< Back
கிரிக்கெட்
ஐ.சி.சி. சிறந்த டெஸ்ட் வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்த பும்ரா
கிரிக்கெட்

ஐ.சி.சி. சிறந்த டெஸ்ட் வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்த பும்ரா

தினத்தந்தி
|
30 Dec 2024 4:26 PM IST

சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள வீரர்களின் பெயர்களை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடமும் விருது வழங்கும் வகையில் பரிந்துரை பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அதன்படி சிறந்த ஒருநாள் மற்றும் டி20 வீரர் விருதிற்கான பரிந்துரை பட்டியலை ஏற்கனவே ஐ.சி.சி. வெளியிட்டுவிட்டது.

இந்நிலையில் 'சிறந்த டெஸ்ட் வீரர்' விருதிற்கு தகுதியான வீரரை தேர்வு செய்ய 4 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்துள்ளது. இந்த வருடம் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு இந்த பட்டியலை தயார் செய்துள்ளது.

அதன்படி அந்த பட்டியலில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களான ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக்கும், இலங்கை வீரரான கமிந்து மென்டிஸ் மற்றும் இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

மேலும் செய்திகள்