< Back
கிரிக்கெட்
ஐ.சி.சி. செப்டம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனை விருது; பரிந்துரை பெயர் பட்டியல் வெளியீடு

image courtesy: @ICC

கிரிக்கெட்

ஐ.சி.சி. செப்டம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனை விருது; பரிந்துரை பெயர் பட்டியல் வெளியீடு

தினத்தந்தி
|
7 Oct 2024 3:59 PM IST

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை அடங்கிய பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

இதில் சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா, காமிந்து மெண்டிஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையை தேர்வு செய்ய வெளியிட்ட பரிந்துரை பெயர் பட்டியலில் இங்கிலாந்தின் டாமி பியூமண்ட், அயர்லாந்தின் ஐமி மாகுவேர், யு.ஏ.இ-யின் ஈஷா ஓசா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


மேலும் செய்திகள்