< Back
கிரிக்கெட்
ஐசிசி தரவரிசை: இந்திய வீரர் திலக் வர்மா முன்னேற்றம்
கிரிக்கெட்

ஐசிசி தரவரிசை: இந்திய வீரர் திலக் வர்மா முன்னேற்றம்

தினத்தந்தி
|
20 Nov 2024 3:21 PM IST

இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 4-வது இடத்தில் உள்ளார்

துபாய்,

ஆண்களுக்கான டி20 கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. . இதில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் திலக் வர்மா 69 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் தொடர்ந்து 2 சதங்கள் விளாசி தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார். இதனால் அவர் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தொடரந்து இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 4வது இடத்தில் உள்ளார் . இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 8வது இடத்தில் உள்ளார்

ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் முதலிடத்திலும், இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 2வது இடத்திலும் உள்ளனர்.

மேலும் செய்திகள்