< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிப்பு
|21 Aug 2024 2:29 AM IST
தற்போதைய தலைவராக உள்ள கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தற்போதைய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்க்லே உள்ளார். இவரது பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. ஏற்கனவே 2 முறை பதவி வகித்த அவர் 3-வது முறையாக போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
இதனையடுத்து தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் வேட்புமனுக்களை அளிக்குமாறு ஐ.சி.சி. அறிவித்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படுவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் எனவும் டிசம்பர் 1 முதல் ஆரம்பம் ஆகும் எனவும் அறிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி.-ன் தலைவராக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷாவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.