< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
நியூசிலாந்து மகளிர் அணிக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி... காரணம் என்ன..?
|23 Sept 2024 3:41 PM IST
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
துபாய்,
நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 29 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.
முன்னதாக இந்த போட்டியில் நியூசிலாந்து அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் ஐ.சி.சி. அந்த அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் தொகையை அபராதமாக விதித்துள்ளது.