< Back
கிரிக்கெட்
தோனியை மிஸ் பண்ணுவேன் - முன்னாள் சிஎஸ்கே வீரர் உருக்கம்

image courtesy: AFP

கிரிக்கெட்

தோனியை மிஸ் பண்ணுவேன் - முன்னாள் சிஎஸ்கே வீரர் உருக்கம்

தினத்தந்தி
|
28 Nov 2024 12:35 PM IST

ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் ராஜஸ்தான் அணியில் விளையாடுவதற்கு காத்திருப்பதாக தேஷ்பாண்டே கூறியுள்ளார்.

மும்பை,

18-வது ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் 2 நாள் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.

அதன்படி நடைபெற்ற இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த துஷார் தேஷ்பாண்டேவை ரூ. 6.50 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. இதனால் அவர் இனிவரும் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாட உள்ளார்.

முன்னதாக அறிமுகம் ஆன புதிதில் பெரும்பாலான போட்டிகளில் ரன்களை வாரி வழங்கினார். இருப்பினும் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனி அவருக்கு போதுமான ஆதரவுகளை கொடுத்து அவரை ஊக்குவித்தார்.

இந்நிலையில் மோசமான காலங்களிலும் தமக்காக நின்ற தோனியை மிகவும் மிஸ் பண்ணுவேன் என்று தேஷ்பாண்டே உருக்கத்துடன் கூறியுள்ளார். மேலும் இந்திய முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் ராஜஸ்தான் அணியில் விளையாடுவதற்காக காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "மஹி பாயை நான் நிறைய மிஸ் பண்ணுவேன். அவர் என்னுடைய மோசமான மற்றும் நல்ல காலங்களில் எனக்காக நின்றார். இருப்பினும் தற்போது ராஜஸ்தான் அணி என் மீது நம்பிக்கையை காண்பித்துள்ளது. எனவே அவர்களுக்காக ஒவ்வொரு போட்டியிலும் என்னுடைய 100% பங்களிப்பை கொடுப்பேன். இந்திய அணிக்காக ஏராளமான அற்புதங்களை நிகழ்த்திய ராகுல் டிராவிட் அவர்களிடம் நிறைய கற்றுக்கொள்ள நான் காத்திருக்கிறேன்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்