< Back
கிரிக்கெட்
இந்தியா வேண்டாமென்று கனடாவுக்கு செல்ல இருந்தேன் .. ஆனால் மும்பை அணி..  - இந்திய இளம் வீரர்

image courtesy: AFP

கிரிக்கெட்

இந்தியா வேண்டாமென்று கனடாவுக்கு செல்ல இருந்தேன் .. ஆனால் மும்பை அணி.. - இந்திய இளம் வீரர்

தினத்தந்தி
|
28 Nov 2024 10:38 AM IST

இந்திய இளம் வீரரான நமன் தீரை ரூ. 5.20 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.

மும்பை,

18-வது ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் 2 நாள் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.

அதன்படி நடைபெற்ற இந்த ஏலத்தில் பஞ்சாபை சேர்ந்த இளம் வீரரான நமன் தீரை ரூ. 5.20 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. கடந்த சீசனிலும் மும்பை அணியில் இடம்பெற்றிருந்த இவர், அதிரடியாக விளையாடியதால் மீண்டும் வாங்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மும்பை அணி தன்னை தேர்வு செய்யாமல் போயிருந்தால் நான் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கலாம் என்று தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "2022-ம் ஆண்டிற்கு முன்னதாக நான் இங்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கனடா நாட்டிற்கு செல்லலாம் என்று முடிவு செய்தேன். என்னுடைய அக்கா அங்கு இருப்பதனால் நான் அங்கு பயணிக்க விரும்பினேன். ஆனால் எனது அப்பாதான் இன்னும் ஒரு வருடம் இங்கிருந்து முயற்சி செய் என்று கூறினார். அந்த வகையில் நான் முயற்சி செய்தபோது எனக்கு ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி ரஞ்சி கோப்பையில் விளையாடிய பின்னர் அடுத்த ஆண்டு மும்பை அணி என்னை ஐ.பி.எல். தொடருக்காக ஏலத்தில் எடுத்தது.

அப்படி என்னை மும்பை அணி எடுத்த பின்னர் என்னுடைய சூழ்நிலை முற்றிலும் மாறியது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் அவர்கள் என்னை ஒரு பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளனர். நிச்சயம் இந்த சீசனில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியிலும் விரைவில் இடம் பிடிக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்