< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல்.தொடரில் அந்த அணிக்காக விளையாட ஆசை - பாக்.முன்னாள் வீரர்

image courtesy: PTI

கிரிக்கெட்

ஐ.பி.எல்.தொடரில் அந்த அணிக்காக விளையாட ஆசை - பாக்.முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
9 March 2025 5:37 PM IST

2026 ஐ.பி.எல்.தொடரில் விளையாட ஆசை உள்ளதாக முகமது அமீர் தெரிவித்துள்ளார்.

கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர் கடந்த வருடம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். தற்போது உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 லீக் தொடர்களில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் அடுத்த 2026-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாட தனக்கு ஆசை உள்ளதாக முகமது அமீர் தெரிவித்துள்ளா.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "எனக்கு 2026 ஐ.பி.எல். தொடரில் விளையாட ஆசை உள்ளது. இதற்காக நான் விண்ணப்பிக்கவும் உள்ளேன். அதிலும் குறிப்பாக விராட் கோலியுடன் சேர்ந்து ஆர்சிபி அணியில் விளையாடுவதில் எனக்கு மிகவும் விருப்பம். ஏனெனில் ஆர்.சி.பி அணி எனக்கு மிகவும் பிடிக்கும். விராட் கோலி ஒரு சிறந்த வீரர். எப்பொழுதுமே திறமையை அங்கீகரிக்க கூடிய அவர் என்னுடைய பந்துவீச்சை பாராட்டி எனக்கு ஏற்கனவே ஒரு பேட் ஒன்றினை பரிசளித்துள்ளார். மேலும் எனது பந்துவீச்சை மிகவும் விரும்பும் அவர் என்னை மைதானத்தில் வைத்து பாராட்டியும் இருக்கிறார்" என்று கூறினார்.

பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட நிலையில் முகமது அமீர் இப்படி கூறியிருப்பது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் முகமது அமீர் சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி இங்கிலாந்து நாட்டின் குடியுரிமைக்காக காத்திருக்கிறார்.

ஒருவேளை இந்த ஆண்டு இறுதிக்குள் அவருக்கு இங்கிலாந்து குடியுரிமை கிடைத்தால் நிச்சயம் அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கு அவர் பாகிஸ்தான் நாட்டை சேராத வெளிநாட்டு வீரராக ஐ.பி.எல். தொடரில் விளையாட விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்