< Back
கிரிக்கெட்
என்னுடைய குழந்தைகளை அந்த இந்திய வீரரின் ஆட்டத்தை பார்த்து வளருமாறு கூறியுள்ளேன் - இயன் பெல்
கிரிக்கெட்

என்னுடைய குழந்தைகளை அந்த இந்திய வீரரின் ஆட்டத்தை பார்த்து வளருமாறு கூறியுள்ளேன் - இயன் பெல்

தினத்தந்தி
|
26 Sept 2024 9:26 AM IST

விராட் கோலியின் கவர் டிரைவ் மிகவும் நன்றாக இருக்கும் என்று இயன் பெல் பாராட்டியுள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இயன் பெல் அந்நாட்டின் சிறந்த வீரர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 161 போட்டிகளில் 5416 ரன்களை குவித்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 118 போட்டிகளில் 7727 ரன்கள் அடித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய வீரர் விராட் கோலியின் கவர் டிரைவ் மிகவும் நன்றாக இருக்கும் என்று இயன் பெல் பாராட்டியுள்ளார். மேலும் தம்முடைய குழந்தைகளிடம் விராட் கோலியின் ஆட்டத்தை பார்த்து கிரிக்கெட்டில் வளருமாறு கூறியுள்ளதாகவும் இயன் பெல் தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-"சிறந்த கவர் டிரைவ் அடிக்கும் வீரர் என்று வரும்போது விராட் கோலியை தாண்டி மற்றொருவரை பார்ப்பது மிகவும் கடினம். கவர் டிரைவ் மட்டுமின்றி விராட் கோலி விளையாடும் விதம், பேட்டிங் மீதான அவருடைய ஆசை, எதிரணிக்கு போட்டியை கொடுக்க விரும்பும் அவருடைய விருப்பம் போன்ற விஷயங்களும் நன்றாக இருக்கின்றன. எந்த பார்மட்டாக இருந்தாலும் விராட் கோலி கவர் டிரைவ் விளையாடும்போது அதைப் பார்ப்பது நன்றாக இருக்கும். என்னுடைய குழந்தைகள் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களை முடிந்தளவுக்கு நான் விராட் கோலி ஆட்டத்தை பார்த்து வளருமாறு கூறி வருகிறேன்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்