< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலிய அணி மிகவும் வலிமையானது என்று நான் நம்பவில்லை - இந்திய முன்னாள் வீரர்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணி மிகவும் வலிமையானது என்று நான் நம்பவில்லை - இந்திய முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
10 Dec 2024 3:54 PM IST

ஆஸ்திரேலியா - இந்தியா இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

ஆஸ்திரேலியா - இந்தியா இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் 2வது போட்டியில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது.

அதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்தியா அடுத்த 3 போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது. அந்த சூழலில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி வரும் 14-ம் தேதி காபா மைதானத்தில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எப்போதுமே சவாலை கொடுக்கும் டிராவிஸ் ஹெட் அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் லைனில் பலவீனத்தைக் கொண்டிருப்பதாக முகமது கைப் தெரிவித்துள்ளார். மேலும், நாம் பயப்படும் அளவுக்கு இந்த ஆஸ்திரேலிய அணி அவ்வளவு வலுவானது என்று நான் நம்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஸ்காட் போலண்ட் ஆஸ்திரேலிய அணிக்காக தொடர்ச்சியாக விளையாடுவதில்லை. அப்படி இருந்தும் கிடைக்கும் வாய்ப்பில் எப்படி எதிரணியை வீழ்த்த முடியும் என்பதை அவர் தெரிந்து வைத்துள்ளார். அப்படிப்பட்ட நிலையில் நம்மால் ஏன் டிராவிஸ் ஹெட்டை வலையில் விழ வைக்க முடியாது?. அவருடைய பலவீனம் அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் என்றால் நாம் ஏன் அங்கு தொடர்ச்சியாக பந்து வீசக்கூடாது?. ஒவ்வொரு பேட்ஸ் மேனுக்கும் பலவீனம் இருக்கும்.

சுமாரான பவுலர்கள் கூட அவுட் சைட் ஆப் ஸ்டம்ப்பில் பந்து வீசினால் விராட் கோலியை அவுட்டாக்க முடியும் என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே அதே போன்ற யுக்தியை நீங்கள் டிராவிஸ் ஹெட்டுக்கு எதிராக பயன்படுத்த வேண்டும். தரமான திட்டத்துடன் முதல் பந்திலிருந்தே அவருடைய பலவீனத்தை தாக்கினால் விக்கெட்டை எடுக்க முடியும். அதை செய்யாமல் நாம் தவறு செய்கிறோம்.

நாம் பயப்படும் அளவுக்கு இந்த ஆஸ்திரேலிய அணி அவ்வளவு வலுவானது என்று நான் நம்பவில்லை. நாம் முதல் போட்டியில் வென்றோம். ஆஸ்திரேலியா நன்றாக விளையாடியதால் இரண்டாவது போட்டியில் வென்றார்கள். அதனால் 1 - 1 என்ற கணக்கில் தொடர் சமனில் இருக்கிறது. நம்முடைய இந்திய அணி வலுவானது. எனவே காபாவுக்கு சென்று 3வது போட்டியில் விளையாடும் போது நம்மால் கம்பேக் கொடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்