< Back
பிற விளையாட்டு
பேட்மிண்டனை விட டென்னிசில் என்னால் சிறப்பாக செயல்பட்டு இருக்க முடியும் - சாய்னா நேவால்
பிற விளையாட்டு

பேட்மிண்டனை விட டென்னிசில் என்னால் சிறப்பாக செயல்பட்டு இருக்க முடியும் - சாய்னா நேவால்

தினத்தந்தி
|
12 July 2024 8:20 AM IST

பேட்மிண்டனில் இந்திய நட்சத்திர வீராங்கனையாக வலம் வந்த சாய்னா நேவால் முழு உடல் தகுதியை எட்ட முடியாமல் போராடி வருகிறார்.

புதுடெல்லி,

பேட்மிண்டனில் இந்திய நட்சத்திர வீராங்கனையாக வலம் வந்த சாய்னா நேவால் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார். மேலும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கம் வென்றுள்ள அவர் தரவரிசையில் 'நம்பர் 1' இடத்தையும் அலங்கரித்துள்ளார்.

ஆனால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓரிரு ஆண்டுகளில் அவரது ஆட்டத்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டது. முழு உடல்தகுதியை எட்ட முடியாமல் போராடி வருகிறார்.

இந்நிலையில் சாய்னா நேவால் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 'எனது பெற்றோர் என்னை டென்னிஸ் விளையாட்டில் ஈடுபடுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சில சமயம் நான் நினைத்து பார்ப்பேன். பேட்மிண்டனை காட்டிலும் டென்னிசில் நிறைய பணம் கிடைக்கிறது. அத்துடன் டென்னிசுக்கு ஏற்ற வலிமை என்னிடம் அதிகம் உண்டு. பேட்மிண்டனை விட டென்னிசில் என்னால் சிறப்பாக செயல்பட்டு இருக்க முடியும்' என்றார்.

மேலும் செய்திகள்