< Back
கிரிக்கெட்
என்னால் அணிக்கு அனைத்து துறைகளிலும் பங்களிப்பை வழங்க முடியும் - இந்திய இளம் வீரர்
கிரிக்கெட்

என்னால் அணிக்கு அனைத்து துறைகளிலும் பங்களிப்பை வழங்க முடியும் - இந்திய இளம் வீரர்

தினத்தந்தி
|
27 Dec 2024 8:13 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 3-வது டெஸ்ட் மழையால் 'டிரா' ஆனது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டீவ் சுமித் 140 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் அடித்துள்ளது. பண்ட் 6 ரன்களுடனும், ஜடேஜா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 310 ரன்கள் பின்தங்கி உள்ள நிலையில் நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் முடிந்த பிறகு இந்திய இளம் வீரரான வாஷிங்டன் சுந்தர் அளித்த பேட்டியில்,

"இந்திய அணி என்னிடமிருந்து சிறந்த விஷயங்களை எதிர்பார்க்கிறது. என்னால் அனைத்து துறைகளிலும் (பேட்டிங், பீல்டிங் மற்றும் பவுலிங்) அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்க முடியும். அதனால் பேட்டிங்கிலும் நாளை நிச்சயம் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.

அணியின் சூழ்நிலை தற்போது சிறப்பாக இருக்கிறது. நாங்கள் முழு எனர்ஜியுடன் விளையாட காத்திருக்கிறோம். இன்னும் 3 நாட்கள் முழுவதுமாக உள்ளன. எனவே நிச்சயம் அணிக்கு தேவையான விஷயங்களை செய்து நாங்கள் அணியை வலுப்படுத்துவோம். நாளை நிச்சயம் பேட்டிங்கிற்கு ஆடுகளம் சாதகமாக செயல்படும் என்பதால் நல்ல ரன் குவிப்பை வழங்குவோம்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்