< Back
கிரிக்கெட்
நான் பும்ராவின் மிகப்பெரிய ரசிகன் - ஆஸி.முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்
கிரிக்கெட்

நான் பும்ராவின் மிகப்பெரிய ரசிகன் - ஆஸி.முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்

தினத்தந்தி
|
2 Jan 2025 6:48 AM IST

நடப்பு பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் பும்ரா சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

சிட்னி,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை தொடங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக இந்த தொடரில் இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். சிறப்பாக பந்து வீசி வரும் அவர் 4 போட்டிகள் முடிவில் 30 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளராக உள்ளார். இந்தியா தரப்பில் இவருக்கு அடுத்த இடத்தில் சிராஜ் 16 விக்கெட்டுகளுடன் உள்ளார்.

இந்நிலையில் பும்ரா மட்டும் இல்லையென்றால் இந்த தொடர் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக இருந்திருக்கும் என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்திய அணியின் மிக முக்கிய வீரராக ஜஸ்பிரித் பும்ரா விளங்குகிறார். அவர் இல்லாமல் இருந்திருந்தால் இந்த தொடர் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக இருந்திருக்கும். அந்த அளவுக்கு அவர் சிறப்பாக செயல்படுகிறார். பும்ரா ஒரு தனித்துவமான பந்துவீச்சாளர் என்பதில் சந்தேகமில்லை.

என்னை போலவே அவரும் பந்து வீசுகிறார். பவுலிங்கில் இருமுனையிலும் சிறப்பாக செயல்படுகிறார். அவரது சாதனைகள் நம்ப முடியாத அளவுக்கு உள்ளன. நான் பும்ராவின் மிகப்பெரிய ரசிகன். 4-வது டெஸ்ட் போட்டி நடந்த மெல்போர்னில் ரசிகர்களின் மெகா கூட்டமும், கடைசி நாள் வரை ஆட்டம் நீடித்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற விதமும் அற்புதம். கிரிக்கெட்டில் டெஸ்ட்தான் இன்னும் உச்சபட்சம் என்பதை அந்த போட்டி காட்டியது" என்று கூறினார்.

மேலும் செய்திகள்