ஐ,பி.எல். வரலாற்றில் அதிக தொகை: ஐயரின் சாதனையை சில நிமிடங்களிலேயே உடைத்த ரிஷப் பண்ட்
|2025 ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் நடைபெற்று வருகிறது.
ஜெட்டா,
18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த வருடம் (2025) நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் ஜெட்டா நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இந்நிலையில் மெகா ஏலம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் செட்1-ல் இடம் பெற்றிருந்த வீரர்களுக்கான ஏலம் முடிவடைந்துள்ளது. அதில் இடம்பெற்றிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகையான ரூ. 26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
ஆனால் சில நிமிடங்களிலேயே டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான ரிஷப் பண்ட் பெயர் ஏலத்தில் வந்தது. அவரை ஏலத்தில் எடுக்க நிறைய அணிகள் ஆர்வம் காட்டின. ஒரு கட்டத்தில் லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவின.
இறுதியில் லக்னோ அணி ரூ.27 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்ற ஸ்ரேயாஸ் ஐயரின் சாதனையை சில நிமிடங்களிலேயே ரிஷப் பண்ட் முறியடித்தார்.