< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலிய தொடரில் நிச்சயம் அவர் இந்தியாவுக்கு பிரச்சினையாக இருப்பார் - மேக்ஸ்வெல்
கிரிக்கெட்

ஆஸ்திரேலிய தொடரில் நிச்சயம் அவர் இந்தியாவுக்கு பிரச்சினையாக இருப்பார் - மேக்ஸ்வெல்

தினத்தந்தி
|
8 Nov 2024 11:42 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.

சிட்னி,

கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இம்முறை ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்டதாக இந்த தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. ஆஸ்திரேலிய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரரான மேக்ஸ்வெல் இந்த தொடரில் ஸ்டீவ் சுமித் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியை உண்டாக்குவார் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "என்னை பொருத்தவரை இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரில் ஸ்டீவ் ஸ்மித் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அவரது ஆட்டம் தற்போது மிகவும் பிரமாதமாக இருக்கிறது. முன்பை விட அவரது ஆட்டத்தில் தற்போது நுணுக்கங்கள் அதிகரித்துள்ளன. பல மணி நேரம் அவர் பயிற்சி செய்தும் திருப்தி அடையாமல் தனது செயல்பாட்டில் முன்னேற்றத்தை செய்து கொண்டே இருக்கிறார். ஒரு வீரர் இவ்வளவு மணி நேரம் பயிற்சியில் ஈடுபடும்போதே அவர் எவ்வளவு சிறந்த பேட்ஸ்மேன் என்பதை வெளிகாட்டுகிறார். நிச்சயம் இந்த தொடரில் அவரது முழுமையான திறன் வெளிப்படும் என்பதனால் இந்திய அணி அவரை சமாளிக்க கடினப்படும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்