< Back
கிரிக்கெட்
இந்திய அணியில் புஜாரா இல்லாதது மகிழ்ச்சி - ஜோஷ் ஹேசில்வுட்
கிரிக்கெட்

இந்திய அணியில் புஜாரா இல்லாதது மகிழ்ச்சி - ஜோஷ் ஹேசில்வுட்

தினத்தந்தி
|
20 Nov 2024 2:53 PM IST

இந்திய அணியில் புஜாரா இல்லாதது மகிழ்ச்சியளிக்கிறது என ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்

பெர்த்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த முறை பார்டர் கவாஸ்கர் தொடரில் சிறப்பாக விளையாடிய புஜாரா இல்லாமல் இந்த முறை இந்திய அணி விளையாடவுள்ளது

இந்த நிலையில், இந்திய அணியில் புஜாரா இல்லாதது மகிழ்ச்சியளிக்கிறது என ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பார்டர் கவாஸ்கர் தொடரில் இம்முறை இந்திய அணியில் புஜாரா இல்லாதது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் இருந்தால் நீண்ட நேரம் அவுட்டாகாமல் பவுலர்களை களைப்பாக்கி விடுவார்.. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முந்தைய தொடர்களில் `அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார் . புஜாரா இல்லையென்றாலும், இந்திய அணியின் பேட்டிங் வலிமை குறையவில்லை. இந்திய அணியில் அதிக இளம் வீரர்கள் உள்ளனர். என தெரிவித்துள்ளார் .

மேலும் செய்திகள்