< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஆப்கானிஸ்தான் அணியின் துணை பயிற்சியாளராக இந்திய முன்னாள் பயிற்சியாளர் நியமனம்
|22 Aug 2024 3:13 PM IST
இவர் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களுக்கு ஆப்கானிஸ்தான் அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காபூல்,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளரான ஆர்.ஸ்ரீதர் ஆப்கானிஸ்தான் அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் நியூசிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களுக்கான ஆப்கானிஸ்தான் அணியின் துணை பயிற்சியாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் இவருடன் நீண்ட காலம் ஒப்பந்தம் மேற்கொள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்புவது குறிப்பிடத்தக்கது.