< Back
கிரிக்கெட்
லார்ட்ஸ் மைதானத்தில் முதல் மகளிர் டெஸ்ட் போட்டி; இந்தியா - இங்கிலாந்து மோதல்

image courtesy; twitter/ @ICC 

கிரிக்கெட்

லார்ட்ஸ் மைதானத்தில் முதல் மகளிர் டெஸ்ட் போட்டி; இந்தியா - இங்கிலாந்து மோதல்

தினத்தந்தி
|
23 Aug 2024 9:22 AM IST

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது அடுத்த சீசனுக்கான போட்டி அட்டவணையை நேற்று வெளியிட்டது. அதன்படி இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் 2025-ல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளன.

இந்திய மகளிர் அணி ஜூன் - ஜூலை காலக்கட்டத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. அதன்பின்னர் 2026ம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்துக்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும் இந்திய மகளிர் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளது.

இந்த டெஸ்ட் போட்டிக்கான தேதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால், இந்த டெஸ்ட் போட்டி ஹோம் ஆப் கிரிக்கெட் என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் மகளிர் டெஸ்ட் போட்டி இதுவாகும்.

மேலும் செய்திகள்