< Back
கிரிக்கெட்
முதல் டெஸ்ட்: டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ய காரணம் என்ன..? - பும்ரா விளக்கம்

image courtesy: twitter/@ICC

கிரிக்கெட்

முதல் டெஸ்ட்: டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ய காரணம் என்ன..? - பும்ரா விளக்கம்

தினத்தந்தி
|
22 Nov 2024 8:32 AM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

பெர்த்,

ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருந்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். வேகத்துக்கு சாதகமான இந்த மைதானத்தில் டாஸ் வென்றால் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுப்பார்கள் என்று அனைவரும் நினைத்த வேளையில் பும்ரா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் டாஸ் வென்ற பிறகு பேட்டிங் செய்ததற்கான காரணம் குறித்து பும்ரா பேசியது பின்வருமாறு:- "நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய உள்ளோம். பிட்ச் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. நாங்கள் தயாரான முறையில் முழு தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம். இங்கே 2018-ல் ஏற்கனவே விளையாடியதால் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். பிட்ச் கொஞ்சம் வேகமாக செல்லும் என்று நினைக்கிறேன்.

நிதிஷ் ரெட்டி அறிமுகமாக களம் இறங்க உள்ளார். நாங்கள் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் சுந்தரை ஒரே ஸ்பின்னராக கொண்டு விளையாடுகிறோம்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்