< Back
கிரிக்கெட்
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் முதல் டெஸ்ட்  நாளை தொடங்குகிறது
கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது

தினத்தந்தி
|
25 Dec 2024 6:03 PM IST

தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி சென்சூரியனில் நாளை தொடங்குகிறது.

சென்சூரியன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-0 என தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என பாகிஸ்தான் கைப்பற்றி தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்சூரியனில் நாளை தொடங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்டது என்பதால் இரு அணிகளும் இந்த போட்டியில் வெற்றி பெற தீவிரம் காட்டும். இந்திய நேரப்படி நாளை மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது .

மேலும் செய்திகள்