< Back
கிரிக்கெட்
முதலாவது டெஸ்ட் போட்டி: பாகிஸ்தான் - வங்காளதேசம் இன்று மோதல்

image courtesy: Twitter/@ICC

கிரிக்கெட்

முதலாவது டெஸ்ட் போட்டி: பாகிஸ்தான் - வங்காளதேசம் இன்று மோதல்

தினத்தந்தி
|
21 Aug 2024 5:30 AM IST

பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற உள்ளது.

ராவல்பிண்டி,

வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் ஆகும். இதனால் இந்த தொடர் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த தொடருக்கான வங்காளதேச அணி ஷாண்டோ தலைமையிலும், பாகிஸ்தான் அணி ஷான் மசூத் தலைமையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரின் முதலாவது போட்டி இன்று காலை 10.30 மணியளவில் ராவல்பிண்டியில் தொடங்குகிறது.

மேலும் செய்திகள்