< Back
கிரிக்கெட்
முதல் டெஸ்ட்; வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வங்காளதேசம் பந்துவீச்சு தேர்வு
கிரிக்கெட்

முதல் டெஸ்ட்; வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வங்காளதேசம் பந்துவீச்சு தேர்வு

தினத்தந்தி
|
22 Nov 2024 8:32 PM IST

டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் மெஹிதி ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஆண்டிகுவா,

வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடரும், அதனை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களும் நடைபெற உள்ளன.அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் மெஹிதி ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

மேலும் செய்திகள்