ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வலுவான நிலையில் ஆப்கானிஸ்தான்
|ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 586 ரன்கள் குவித்தது.
புலவாயோ,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 586 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 154 ரன்களும், பிரையன் பென்னெட் 110 ரன்களும், எர்வின் 104 ரன்களும் குவித்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 95 ரன் எடுத்திருந்தது. ரமத் ஷா (49 ரன்), ஹஷ்மத்துல்லா ஷகிடி (16 ரன்) களத்தில் இருந்தனர்.
3-வது நாளான நேற்று ரமத் ஷா- ஷகிடி ஜோடி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. இவர்களை கடைசி வரை ஜிம்பாப்வே பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. 3-வது நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 125 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. ரமத் ஷா 231 ரன்களுடனும் , ஷகிடி 141 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். .
இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.