< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்காளதேச அணி பந்துவீச்சு தேர்வு
|19 Sept 2024 9:09 AM IST
டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஷாண்டோ பந்துவீச்சை தேர்வு செய்தார்.
சென்னை,
ஷாண்டோ தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஷாண்டோ பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.