ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணியில் அறிமுகமாகும் ஆல் ரவுண்டர்..?
|இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது போட்டி வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது.
பெர்த்,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய வீரர்கள் பெர்த்தில் உள்ள வாகா மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே முதலாவது போட்டி நடைபெறும் பெர்த் ஆடுகளம் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று அதன் பராமரிப்பாளர் சமீபத்தில் எச்சரித்திருந்தார். மேலும் பயிற்சியின் போதும் இந்திய வீரர்கள் வேகப்பந்து வீச்சில் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த முதல் போட்டிக்கான இந்திய அணியில் இளம் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான நிதிஷ் ரெட்டி அறிமுகம் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆழத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.