< Back
கிரிக்கெட்
முதலாவது டி20 போட்டி: தான் தேர்வு செய்த இந்தியாவின் ஆடும் 11 அணியை அறிவித்த முன்னாள் வீரர்
கிரிக்கெட்

முதலாவது டி20 போட்டி: தான் தேர்வு செய்த இந்தியாவின் ஆடும் 11 அணியை அறிவித்த முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
27 July 2024 2:01 PM IST

இந்தியா - இலங்கை இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

பல்லகெலே,

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்காக தான் தேர்வு செய்துள்ள இந்திய அணியின் ஆடும் 11-ஐ இந்திய முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் அறிவித்துள்ளார்.

அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில்லை தேர்வு செய்துள்ள அவர், விக்கெட் கீப்பராக ரிஷப் பண்டை தேர்வு செய்துள்ளார். சஞ்சு சாம்சனை அணியில் தேர்வு செய்யவில்லை.

வாசிம் ஜாபர் தேர்வு செய்துள்ள இந்திய அணி விவரம் பின்வருமாறு:-

கில், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ்.

மேலும் செய்திகள்