முதல் டி20 போட்டி; பில் சால்ட் அதிரடி சதம்...வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இங்கிலாந்து
|இங்கிலாந்து தரப்பில் அதிரடியாக ஆடிய பில் சால்ட் சதம் (103 ரன்) அடித்து அசத்தினார்.
பார்படாஸ்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக பூரன் 38 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சாகிப் மஹ்மூத் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அதிரடியாக ஆடிய பில் சால்ட் சதம் (103 ரன்) அடித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. 2வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.