< Back
கிரிக்கெட்
முதல் ஒருநாள் போட்டி; பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்

Image Courtesy: @TheRealPCB

கிரிக்கெட்

முதல் ஒருநாள் போட்டி; பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
17 Dec 2024 10:33 AM IST

பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது.

பார்ல்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-0 என தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது.

முதலாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் இன்று நடக்கிறது. பணிச்சுமை காரணமாக தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா முதலாவது ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக மார்க்ரம் அணியை வழிநடத்துகிறார். டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், ரபடா, கேஷவ் மகராஜ், ஷம்சி உள்ளிட்டோர் அணிக்கு திரும்பியிருப்பதால் தென் ஆப்பிரிக்க அணி வலுவாக காணப்படுகிறது.

முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். இதனால் ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும். இந்திய நேரப்படி ஆட்டம் மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் செய்திகள்